இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட நிதியமைச்சு!!

714

மகிழ்ச்சியான தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு நெ ருக்கடிக்கு சில தினங்களில் தீர்வு காணப்படும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் எரிவாயுக்கு தட்டுபாடு காணப்படுகிறது.

உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் வகையில் 12 ஆயிரம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக 3600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நாளையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

3600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை நாட்டை வந்தடைந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மேலும் 3600 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பலும் இலங்கை வரவுள்ளது.

அவசர கொள்வனவின் கீழ் ஆறாயிரம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.