கால் இல்லை ஆனாலும் விடாமல் ஓடி வென்ற தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர்!!

491

சீனாவில் நடைபெற்ற இராணுவ வீரர்களுக்கான தடகளப்போட்டியில் தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளார், மாற்றுதிறனாளி இராணுவ வீரர்.

தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தை சேர்ந்த ஆனந்தன் பள்ளி பருவத்திலேயே தடகளப் போட்டிகளில் ஆர்வம் கொண்டவராவர். தற்போது இராணுவத்தில் சுபேதாராக பெங்களுரு பிரிவில் பணியாற்றி வருகிறார்.

2008ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீ விரவாதிகள் நி கழ்ந்திய க ண்ணி வெ டி தா க்குதலில், சி க்கி இடது கா லை இ ழந்தார் ஆனந்தன்.

காலை இ ழந்தாலும் தாய்நாட்டுக்காக பெருமை சேர்க்க எண்ணிய ஆனந்தனுக்கு கை கொடுத்தது தடகளம். செயற்கையாக பிளேட் பொருத்தப்பட்டபின் நடை பயிற்சியையும், வேகமாக ஓடும் பயிற்சியையும் அவர் மேற்கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சியகத்தில் ஆனந்தன் சிறப்பு பயிற்சி பெற்றார். இந்நிலையில், 144 நாடுகள் பங்கேற்ற 7வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டிகள் கடந்த மாதம் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆனந்தன் கலந்துகொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று 3 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.