வவுனியா பொலிசாருக்கு எ திராக மின்சார சபை ஊழியர்கள் ஆ ர்ப்பாட்டம்!!

521

மின்சார சபை ஊழியர்கள்

கடமை நேரத்தில் மின்சார சபை ஊழியர்கள் தா க்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கு ற்றவாளிகளை கைது செய்யவில்லை எனத் தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் முன்பாக இன்று (05.11) கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

வவுனியா, ஆச்சிபுரம், 10 ஆம் ஒழுங்கையில் உள்ள சில வீடுகளில் மின் து ண்டிப்க்காக நேற்று (04.11) சென்ற மின்சார சபை ஊழியர்களுடன் அப்பகுதியில் உள்னள சிலர் மின் துண்டிப்பு தொடர்பில் தா க்குதல் நடத்தியிருந்தனர்.

குறித்த தா க்குதலில் மின்சார சபை ஊழியர்கள் 5 பேர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வருவதுடன், மின்சார சபையின் வாகனம் ஒன்றும் சே தத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மூவரை ச ந்தேகத்தின் பேரில் கைது செய்த வவுனியா பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மின்சாரசபையின் பூங்கா வீதியில் உள்ள பிரதான காரியாலயம் முன்பாக ஒன்றுகூடிய மின்சார சபை ஊழியர்கள் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தா க்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ச ந்தேக நபர் கைது செய்யப்படாமையைக் க ண்டித்தும், தமது பணிக்கு பா துகாப்பு வேண்டியும் குறித்த கவ னயீர்ப்பு போ ராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பொலிசார் அ சமந்தமாக செயற்படுவதானால் தா க்குதல் சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இதன்போது மின்சார சபை ஊழியர்கள் இருவரை அழைத்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் 24 மணியாலத்திற்குள் குறித்த நபர்களை கைது செய்வதாக தெரிவித்தையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டது.

எனினும் மின்சார சபை ஊழியர்கள் அலுவலகம் திரும்பிய போதும், அலுவலகத்தில் இருந்து வெளியில் சென்று மின்சார சேவைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.