புகை பிடிப்பதில் இந்தியப் பெண்கள் உலகளவில் இரண்டாவது இடம்!!

696

Smoking

உலகளவில் சிகரெட் குடிக்கும் பெண்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா மெடிக்கல் அசோசியேசன் (1980 – 2012) நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 12.1 மில்லியன் பெண்கள் தற்போது சிகரெட் புகைப்பதாக கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை விட அதிகமாகும். இந்தியாவில ஒரு நாளைக்கு ஒருவர் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை 8.2 ஆகும்.

கடந்த 1980ம் ஆண்டில் இந்தியாவில் புகை பிடித்த ஆண்களின் எண்ணிக்கை 33.8 சதவீதமாக இருந்தது, தற்போது 2012ம் ஆண்டின் படி 23 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆய்வில் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 1980 ம் ஆண்டில் 721 மில்லியனாக இருந்த சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 2012 ம் ஆண்டு கணக்குப்படி 967 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் 10 ஆண்களில் 3 பேர் சிகரெட் புகைப்பதாகவும், 20 பெண்களில் ஒருவர் சிகரெட் புகைப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியாவில் புகை பிடிப்பவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதமாகவும், உடல் நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதமாகவும் உள்ளது.