எனது கணவர் குளிக்கவேமாட்டார் : வி வாகரத்து வேண்டும் : யாழ். நீதிமன்றத்தில் விசித்திர வ ழக்கு!!

496

விசித்திர வழக்கு

தனது கணவர் குளிப்பதில்லை என்ற காரணத்தை தெரிவித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் வ  ழக்குத் தா க்கல் செய்திருப்பது தற்போது பே சுபொருளாக மாறியுள்ளது.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக நீதிமன்றத்தில் மனுத் தா க்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில், எனது கணவர் குளிப்பது இல்லை என்று காரணத்தை கூறி வி வாகரத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழங்குவதற்கு எதிர் ம னுத்தா க்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் மனு மீதான வி வாதம் இன்று நடத்தபட்டது. இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் குறித்த மனுவை த ள்ளுபடி செய்தது.

“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற ச ட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக் கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.