நாட்டில் தொடரும் எரிவாயு நெ ருக்கடி : 800 பேக்கரிகள் மூடல்!!

2


எரிவாயு நெ ருக்கடி


நாட்டின் பல பகுதிகளில் நீடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இதுவரையில் 800 பேக்கரிகள் மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 7000 பேக்கரிகள் உள்ளன. இதில் நூற்றுக்கு 10 வீதமான பேக்கரிகள் முழுமையாக எரிவாயு பயன்பாட்டில் செயற்படுகின்றன.அதற்கமைய எரிவாயு பயன்பாட்டுடைய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி மூடப்படுவதனால் பேக்கரி உற்பத்திகள் சந்தைக்கு வருவதில் குறைவு ஏற்பட்டுள்ளது.


எனினும் எரிவாயு நெ ருக்கடி அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 12 ஆயிரம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.