இரவில் பெண் வேடம் : மயானத்தில் உறக்கம் : மீட்கப்பட்ட ஆண் ச டலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

411

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வனப்பகுதி அருகே மீ ட்கப்பட்ட ஆண் ச டலம் தொடர்பில் அதிர்ச்சி பின்னணித் தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில கண்ணூர் பகுதியில் மூன்று மாதம் முன்னர் வனப்பகுதியில் இருந்து பெண் வேடத்தில் ஆணின் ச டலம் மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசாருக்கு அதிர வைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. கண்ணூர் பகுதியில் சுழலி என்ற கிராமத்தில் வாடகை குடியிருப்பில் வசித்துவரும் 45 வயது சசி என்பவரின் ச டலம் அது என தெரியவந்துள்ளது.

பகல் முழுவதும் மர வேலை தொடர்பான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் இரவானதும் பெண்களுக்கான உடை அணிந்து அந்த கிராமப்பகுதியில் வலம் வந்துள்ளார். மட்டுமின்றி பெண்கள் போன்று நகைகள் அணிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.

பெண் வேடத்தில் கிராமப்பகுதியில் வலம் வந்த சசி, பின்னர் பேய் வேடத்தில் ஆள் நடமாட்டம் ஏதுமற்ற பகுதிகளில் வலம் வந்ததாகவும் அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

பேய் வேடத்தில் வலம்வர தொடங்கிய சசி, பெரும்பாலான இரவுகளில் சுடுகாட்டில் படுத்துறங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பகல் விடிந்தால் மீண்டும் ஆணாக மாறி, வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரால் பொதுமக்களுக்கு எந்த தொ ல்லையும் இதுவரை ஏற்பட்டது இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சசியின் ச டலத்திற்கு அருகே விஷம் இருந்த சிறு போத்தல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

இதனால் அவர் த ற்கொ லை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பெண்களே ச டலத்தை முதலில் கண்டதாகவும், இதனையடுத்து பொலிசார் ச டலத்தை மீட்டதாகவும் கூறப்படுகிறது.