வரிஏய்ப்பு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக ஸ்பெயின் இளவரசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் இளவரசி இன்பேண்டா கிறிஸ்டினா(48), இவரது கணவர் இனாக்கி உர்டங்கரின். தன் கணவனின் வியாபார நிறுவனங்களை கவனித்து வந்த இவர், வியாபார நிறுவனங்களின் கணக்கு வழக்குகளில் மோசடி செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரின் கணவர் கடந்தாண்டு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிதியை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜோஸ், இளவரசியின் கணவரின் நிறுவனத்தில் இளவரசியும் பங்குதராராக இருந்து ஊழலுக்கு உடந்தையாய் இருந்துள்ளார்.
எனவே வரும் மார்ச் 8ம் திகதி இளவரசி பால்மா டி மல்லோர்கா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரச குடும்பத்தை சார்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.