யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் சிவக்கொழுந்து(புனிதம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனரூபவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
திருமாறன்(மாறன்- பிரான்ஸ்), லவன்(கனடா), காலஞ்சென்ற மயிலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
குகப்பிரியா(பிரான்ஸ்), ரஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவராசா, குகனேசபிள்ளை, நித்தியலட்சுமி, அகிலன், பிரகாஷ்(அமுதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திராதேவி, கைலாசபதி, கலைச்செல்வி, சுபாசினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
குகனேசபிள்ளை இந்திராதேவி தம்பதிகள், காலஞ்சென்ற மனோகரன், லலிதா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
டக்ஷா, டிஷா, டிஷான்(பிரான்ஸ்), அனுஷ், அஜிஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776619708
- Mobile : +94778758968
- Mobile : +94775183831
- Mobile : +94771667521
- Mobile : +33698579061
- Mobile : +14163037831
- Mobile : +94771657895
- Mobile : +94776943512