சர்வதேசத்தில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்த ராதிகா சிற்சபேசன், நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்து, அரசாங்கத்திற்கு எதிராக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சிற்சபேசன் சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு விஜயம் செய்ததால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிற்சபேசன் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் அதிகாரிகள் மிகவும் நாகரீகமான முறையில் நடந்து கொண்டதாகவும், சிற்சபேசனின் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.