யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் ஆரம்பமாகும் பயணங்கள்!!

2


யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம்


யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக இன்றைய தினம் சோதனை விமான ஓட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய இரத்மலானை விமான நிலையத்தில் இன்று பயணிக்கும் விமானம் ஒன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.ஒரு மணித்தியாலத்தின் பின்னர் குறித்த விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. அங்கு செல்லும் விமானம் மீண்டும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


அதற்கமைய இன்றைய தினம் வர்த்தக விமான பயணங்கள் மேற்கொள்ளப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளை முதல் வர்த்தக விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகாரசபை தெரிவித்துள்ளது.