1200 திரையங்குகளில் வெளியாகின்றது ஜில்லா!!

238

Jillaவிஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ஜில்லா படம் நாளை 10ம் திகதி ரிலீசாகிறது. இப்படத்தை நேசன் இயக்கியுள்ளார். சூப்பர் குட்பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார். தணிக்கை குழுவினர் ஜில்லாவுக்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் 1200 திரையங்குகளில் ஜில்லா படம் திரையிடப்பட உள்ளது என்று ஆர்.பி.சவுத்ரி கூறினார்.

கேரளாவில் வெளியாகும் உரிமையை மோகன்லால் வாங்கி இருப்பதாகவும், கேரளா முழுவதும் 300 திரையங்குகளில் வெளியிடுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஆர்.பி.சவுத்ரி கூறும் போது விஜய்யை வைத்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் 6வது படம் இது. விஜய் தற்போது மாஸ் ஹீரோவாக உள்ளார். அதற்கேற்ப இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. பெரிய வெற்றி பெறும் என்றும் கூறினார். இயக்குனர் நேசன் கூறும் போது விஜய் மோகன்லால் என இரு பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கியுள்ளேன். விஜய் என்னை புதுமுக இயக்குனராக நடத்த வில்லை. முழு சுதந்திரம் கொடுத்தார். விஜய் வற்புறுத்தல் பேரில் படத்தின் டைட்டிலில் மோகன்லால் பெயரை முதலில் போட்டுள்ளோம். மதுரை பின்னணி கதையம்சத்தில் தயாராகியுள்ளது. தந்தை மகன் உறவை சித்தரிப்பதாக இருக்கும் என்றார்.