வவுனியாவில் வான் – மோட்டார் சைக்கில் விபத்து!!

5


விபத்து


வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (08.11.2019) மதியம் வான் – மோட்டார் சைக்கில் மோதி விபத்துள்ளானது.ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா நோக்கி வான் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் இலுப்பையடி சந்தியில் அதே பாதையில் வந்த மோட்டார் சைக்கில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வானுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.


இவ் விபத்தில் வான் பகுதியளவில் சேதமைந்ததுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.