வவுனியாவில் புதிய ஜனநாயக முன்னனியின் காரியாலயம் திறந்து வைப்பு!!

4


திறந்து வைப்பு


வவுனியா தாண்டிக்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயம் இன்று (08.11.2019) மதியம் 1.30 மணியளவில் அமைச்சர் மனோ கணேசனால் திறந்து வைக்கப்பட்டது.தேசிய ஒருங்கிணைப்பு உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் மனோ கனேசனால் உத்தியோகபூர்வமாக காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.


ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட முகாமையாளர் துரை தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் ரசிகா கமகே, அமைச்சின் இணைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.