கணவனை தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய நடிகைக்கு ஏமாற்றம்!!

447

Marathi

காணாமல் போனதாக கூறப்பட்ட மராத்திய நடிகை சென்னையில் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் தானே பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட்டார். நடிகையின் நகைகளுடன் தலைமறைவான காதலனை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மராத்தி துணை நடிகை அல்கா புனேவர். 44 வயதான இவர் தானேயை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் 27ம் திகதி மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நவிமும்பையை அடுத்த உரன் பகுதிக்கு சென்றவர் மாயமானார்.

இது தொடர்பாக அல்காவின் கணவர் சஞ்சய், பொலிசில் புகார் செய்தார். காணாமல் போன அன்று தன் மனைவி நிறைய நகைகள் அணிந்து இருந்ததாக புகாரில் தெரிவித்து இருந்தார். புகாரின்பேரில் பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அல்காவின் நண்பர் சஞ்சய் சோன்கர் என்பவரை பொலிசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது நடிகை அல்காவும், அவரது ஆண் நண்பர் அலோக் பலிவாலும் மராட்டியத்தை விட்டு ஓடிபோய்விட்டதாக தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகை அல்கா, கடந்த திங்கட்கிழமை சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு பொலிஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது 44 வயதான நானும், அலோக் பாலிவாலும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தோம். அலோக் பாலிவாலுக்கு 24 வயது தான் ஆகிறது.

எங்களது காதல் விவகாரம் எனது கணவர் சஞ்சய்க்கு சமீபத்தில் தெரியவந்தது. அவர் என்னை கண்டித்தார். இதனால் கடந்த மாதம் 27ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி அலோக் பாலிவாலை சந்தித்தேன். இனிமேல் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று அவரிடம் கூறினேன்.

அதன்பின் நாங்கள் இருவரும் கோபோலி பகுதிக்கு சென்றோம். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக எனது காரை அங்கிருந்த பள்ளத்தில் உருட்டிவிட்டோம்.

இதற்கு எனது கார் சாரதி மற்றும் நண்பர் சஞ்சய் சோன்கர் ஆகியோர் உதவியாக இருந்தனர். அதன்பின் அங்கிருந்து பெங்களூர் சென்றோம். அங்கிருந்து சென்னை வந்தோம்.

சென்னையில் எனது காதலன் அலோக், என்னுடைய நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு என்னை தவிக்கவிட்டு விட்டு சென்று விட்டார் என்று அல்கா மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை பொலிசார், தானே பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்து பொலிசார் விமானம் மூலம் சென்னை விரைந்தனர்.

இதற்கிடையே நடிகை அல்கா சென்னை வேப்பேரியில் உள்ள பெண்கள் விடுதியில் பொலிஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

சென்னை வந்த தானே பொலிசார் நடிகை அல்காவை மீட்டு தானே திரும்பினர். நடிகை அல்காவை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து நகை, பணத்தை அபகரித்துக் கொண்டு தப்பியோடிய அவரது காதலன் அலோக் பாலிவாலை பொலிசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.