வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் வருடாந்த சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு!!

37


சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு


வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு நிகழ்வு இன்று (11.11) கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.ரம்சீன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி.தியாகயோதி யுவராஜா கலந்துகொண்டிருந்தார்.


ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவித்து பாண்டு வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டதுடன், தேசியக் கொடியை பிரதம விருந்தினர் ஏற்றிவைக்க பாடசாலைக் கொடியை கல்லூரி அதிபர் எற்றினார்.


வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வில் தரம் 06 இருந்து 13 வரையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், 2018 ஆம் ஆண்டு கா.பொ.சாதாரண தரத்தில் 5A இற்கு மேல் எடுத்த மாணவர்கள்,

2018 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், 2018 ஆம் ஆண்டு பல்வேறு இணைபாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய மட்டத்தில் தெரிவான மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.