தமிழகத்தில் தொடரும் அ வலம் : அதிமுக கொடிக்கம்பம் விழுந்து லொறியில் சிக்கிய பெண்!!

328

தொடரும் அ வலம்

தமிழகத்தில் அஇஅதிமுக நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட கட்சி கொடிக் கம்பத்தால் 30 வயது பெண் லொறியில் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் அவினாசி சாலையிலே இவ்விபத்து நடந்துள்ளது. விபத்துக்குள்ளான அனுராதா, கோகுலம் பார்க்கில் பணியாற்றி வருகிறார், நவம்பர் 11ம் திகதி காலை தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அஇஅதிமுக நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாலையில் விழுந்துள்ளது. இதைக்கண்ட அனுராதா, கம்பத்தை சுற்றிச் செல்ல முயன்ற போது நிலைதடுமாறி விழ பின்னால் வந்த லொறியில் சிக்கியுள்ளார்.

சம்பவயிடத்தில் இருந்தவர்கள் அனுராதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்தில் லொறி அனுராதாவின் இரண்டு கால்கள் மீதும் ஏறியதில் க டுமையான பா திப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 30 வயதான பெண் அனுராதா ஒருவரின் ஊதியத்தை நம்பியே ஒட்டுமொத்த குடும்பமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுராதாவிற்கு 7 மணிநேரம் அ றுவை சி கிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், 48 மணிநேரம் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அதன் பின் அவருக்கு காலில் ஏதேனும் பா திப்பு இருக்கிறதா என்பது குறித்து தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து என வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், லொறி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். எனினும், சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், காவல் நிலையத்தில் அனுமதிப் பெற்று தான் அந்த கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் சென்னையில் சுபஸ்ரீ என்ற 23 வயதான பெண், அஇஅதிமுக பேனர் விழுந்து விபத்துக்குள்ளாகி உ யிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அ திர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுக் கூரதக்கது.