விளையாட்டில் ஊ ழல், சூ தாட்டத்தை ஒடுக்க க ட்டுப்பாடுகளை கடுமையாக்கி.. புதிய அதிரடி சட்டத்தை அமுல்படுத்திய இலங்கை!!

237

இலங்கை கிரிக்கெட் அணியை பா தித்துள்ள ஊ ழல்களைத் தடுக்கும் முயற்சியில் ஆட்ட நிர்ணயத்திற்கு கடுமையான அ பராதங்களை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை, சூ தாட்டத்திற்கான கட்டுப்பாடுகளையும் க டுமையாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டி ஆட்ட நிர்ணயம் என்ற கு ற்றம்சாட்டப்பட்டது உட்பட ஊ ழல் கு ற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டை பா தித்துள்ளன.

இலங்கையில் சூ தாட்டம் ஏற்கனவே ச ட்டவிரோதமானது, ஆனால் புதிய விதிகள் இலங்கையர்கள் வெளிநாட்டு போட்டிகளிலும் சூ தாட்டத்தில் ஈடுபடுவதை த டை செய்துள்ளது.

புதிய சட்டத்தின் கீழ் கு ற்றவாளிகள் 10 ஆண்டுகள் வரை சி றைத்த ண்டனையும், 100 மில்லியன் ரூபாய் வரை (555,000 டொலர்) அபராதம் விதிக்கப்படலாம்.

பாராளுமன்றத்தால் ஒருமனதாக குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பேசிய இலங்கை விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ , இந்த சட்டத்தைத் தடுக்க பலர் முயன்றனர், ஆனால் அது இன்று எடுத்துக் கொள்ளப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விளையாட்டின் உள்ளுர் நிர்வாகம் உச்சி முதல் பாதம் வரை ச ர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கையை உலகின் மிக ஊழல் நிறைந்த கிரிக்கெட் நாடுகளில் ஒன்றாகக் கருதுவதாகவும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.