ஓமானில் பலத்த மழையில் சி க்கிய 6 இந்தியர்கள் : 14 அடி ஆழத்தில் சகதிக்குள் இற ந்து கிடந்த ப ரிதாபம்!!

278


6 இந்தியர்கள்



ஓமானில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது கட்டுமானப்பணியில் ஈடுபட்ட 6 இந்தியர்கள் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.



ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து வடமேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோர நகரமான சீப் என்கிற நகரத்தில், குழாய் பாதிக்கும் வேலைகள் தீ விரமாக நடந்து வந்தன.




“நவம்பர் 10 ம் திகதியன்று கனமழை பெய்து கொண்டிருந்த சமயத்தில், 295 மீட்டர் நீளமும் 14 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு தளத்தில் இந்தியர்கள் 6 பேரும் குழாய்களை ப திக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்”.


மழையின் தீ விரம் அதிகரித்ததால் உள்ளே சென்றிருந்த 6 இந்தியர்களும் வெளியில் வர முடியாமல், மழை நீர் மற்றும் சேற்றில் சி க்கி இ றந்துள்ளனர்.

மீ ட்பு ப டை வீரர்கள் விரைந்து சென்றாலும் கூட, சுமார் 12 மணி நேரத்திற்கு பின்னரே அவர்களுடைய ச டலங்களை வெளியில் மீ ட்டெடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து இந்திய தூதரகம் ஒரு ட்வீட்டில், “நவம்பர் 10 ம் திகதி பெய்த கனமழையைத் தொடர்ந்து ஓமனின் மஸ்கட், சீப் பகுதியில், இந்தியர்கள் என நம்பப்படும் ஆறு தொழிலாளர்கள் கொ ல்லப்பட்ட சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் வ ருத்தப்படுகிறோம்”.

“சம்பவத்தின் முழு உண்மைகளையும் அறிந்து கொள்ளவும், பா திக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் தூதரகம் ஓமன் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. பா திக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆ ழ்ந்த இ ரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளது.