ச ட்டவிரேதமாக படகு மூலம் வெளிநாட்டு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் பலர் கைது!!

595

இலங்கையர்கள் பலர் கைது

ச ட்டவிரோதமான முறையில் படகு வழியாக தலைமன்னாரிலிருந்து இந்தியா செல்ல முயன்ற 8 இலங்கையர்கள் நேற்று இலங்கை க டற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படகு வழியாக போர் காலங்களில் வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக, பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவு, அவுஸ்திரேலியாவை நோக்கிய ச ட்டவிரோத படகுப் பயணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.