கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை இரட்டையர்கள் மேற்கொள்ளும் முயற்சி!!

264

இலங்கை இரட்டையர்கள்

உலக நாடுகளில் உள்ள அதிகளவான இரட்டையர்களை ஒன்றுகூடச் செய்து கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கையை சேர்ந்த இரட்டையர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் தலைவர்களான உபுலி கமகே மற்றும் ஷமலி கமகே ஆகியோரே இவ்விதமான முற்சியை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரட்டையர்கள் அமைப்பின் கூட்டத்தில் வைத்து இவர்கள் கருத்துரைக்கையில்,

இலங்கை இரட்டையர்கள் அமைப்பினை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திததி பிரம்மாண்டமான மாநாடொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம்.

இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் 28,000 உறுப்பினர்களோடு, உலக நாடுகளில் உள்ள இரட்டையர்களையும் இலங்கைக்கு அழைத்து இந்த மாநாட்டினை நடத்தவுள்ளோம். இதன்மூலம், அதிக அளவில் இரட்டையர்களை ஒன்றுகூடச் செய்து கின்னஸ் உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த இரட்டையர்கள் அமைப்பானது இலங்கையில் கடந்த 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.