குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த நபருக்கு கிடைத்த அதிர்ஷ்ட பொருள் : அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

505

தாய்லாந்தில் குப்பை பொறுக்கி வரும் நபருக்கும், திமிங்கலத்தின் வாந்தி என்றழைக்கப்படும் மஞ்சள் நிறத்தில் மெழுகு போன்று இருக்கும் ஒன்றை குப்பை பகுதியில் இருந்து எடுத்துள்ளதால், கோடீஸ்வரராக மாறவுள்ளார்.

தாய்லாந்தை சேர்ந்தவர் Somsak Boonrith. 45 வயதான இவர் முதலில் மீனவராக இருந்துள்ளார். இந்நிலையில் புயல் காரணமாக அவரிடமிருந்த படகு சே தமடைந்ததால், கடற்கரையில் இருக்கும் குப்பைகளை எடுத்து விற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இவர் குப்பை சேகரித்து கொண்டிருந்த போது, மஞ்சள் நிறத்தில் மெழுகு போன்று இருக்கும் பொருளை கண்டுள்ளார். இதை அவர் திமிங்கலத்தின் வாந்தி(Ambergris) என்று நம்பி அதை எடுத்து வந்துள்ளார்.

நடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக செமிக்காமல் திமிங்கலத்தின் குடல் பகுதிலேயே தங்கி விடும்.

வெளியே செல்லாது, இதானால் அது ஒரு பெரிய பந்து போல் உருவாகும். இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும்.

மெழுகு பந்துப் போல் இருக்கும். இந்த பொருளை விஞ்ஞானிகள் Ambergris என அழைக்கின்றனர். வாசனை திரவியங்கள் தயாரிக்க இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும்.

இதை அவர் மீனவர் என்பதால் ஏற்கனவே அறிந்து, அது திமிங்கலத்தின் வாந்தி என்று நம்பியே எடுத்து வந்துள்ளார். அதன் பின் உறவினர்களிடம் காட்டிய போதும், அவர்களும் இதை திமிங்கலத்தின் வாந்தி தான் என்று கூறியுள்ளனர்.

அதை உறுதி செய்வதற்காக தீயில் சூடுபடுத்திய போது, மெழுகு போன்று உருகியுள்ளது. இதனால் அதன் எடையை வைத்து அதன் மதிப்பு தற்போதைய நிலைக்கு 80,000 பவுண்ட்?(1,85,29,783 கோடி ரூபாய்) விற்கும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அப்படி அந்த விலைக்கு இது போனால், அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மீண்டும், படகை வாங்க Somsak Boonrith திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இதே போன்று கடந்த 2016-ஆம் ஆண்டு 1.5 கிலோ கொண்ட திமிங்கலத்தின் வாந்தி 50,000 பவுண்ட்டிற்கும், அதே ஆண்டு ஓமனைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு இதே போன்று 79 கிலோ எடைக்கு கிடைத்துள்ளதால், அதை அவர் 2.3 மில்லியன் பவுண்ட்டிற்கு விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.