T20 உலக கிண்ணப் போட்டி வங்கதேசத்தில் நடைபெறுவதில் சிக்கல் : தென்னாபிரிக்கா, இலங்கை போட்டிகளை நடத்த விருப்பம்!!

546

T20டுவென்டி–20 உலக கிண்ணப் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் வருகிற மார்ச் மாதம் 20ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை டுவென்டி- 20 உலக கிண்ண போட்டிகள் நடக்க உள்ளது.

இங்கு நடைபெறும் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, போட்டிகளை வங்கதேசத்தில் நடத்துவது குறித்து கலந்து ஆலோசிக்க ஐசிசி வருகிற 16ம் திகதி கூடுகிறது.

இதற்கிடையே தற்போது வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளதால், வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் பாதுகாப்பு குறித்து புதிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டிகளை நடத்த தென் ஆப்ரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.