வவுனியா மாவட்ட வாக்களிப்பு வீதம் வெளியானது!!

295

வாக்களிப்பு வீதம்

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 5.00 மணிவரை இடம்பெற்றது.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்களிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் இன்று (16.11.2019) காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதியில் 75.12 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

காலை 9.00 மணியளவில் 23 வீதமான வாக்குப்பதிவும், காலை 11.00 மணியளவில் 47 வீதமான வாக்குப்பதிவும், மதியம் 2.00 மணியளவில் 66 வீதமான வாக்குப்பதிவும், மாலை 3.30 மணியளவில் 70 வீதமான வாக்குப்பதிவும்,  மாலை 5.00 மணிக்கு 75.12 வீதமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் எவ்வித தேர்தல் வ ன்முறைகளும் இடம்பெறவில்லை என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார். வவுனியாவில் தேர்தல் கடமைக்காக 2155 பா துகாப்புப் பிரிவினரும் 1728 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.