சூர்யாவுடன் குத்தாட்டம் போடத் தயாராகும் சோனாக்ஷி!!

262

Sonashiஒரு பாடலுக்கு ஏதாவது கவர்ச்சி நடிகையை ஆட வைக்கும் நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. பிரபல நாயகிகள் ஆடினால்தான் சம்பவம் களைகட்டுகிறது. நயன்தாரா, ஸ்ரேயா தொடங்கி பல முன்னணி நடிகைகள் இப்படி ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள்.

ஹிந்தியை பொறுத்தவரை அனைத்து நடிகைகளும் ஏதாவது ஒரு படத்திலாவது ஒற்றை பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள். மும்பை நடிகைகளை ஆட வைப்பதுதான் இப்போது பேஷன்.

வடகறி படத்தில் நடிகை சன்னி லியோனுக்கு ஒரு கோடி கொடுத்து ஆட வைத்தார்கள். இப்போது லிங்குசாமியின் முறை. சூர்யாவை வைத்து இவர் இயக்கி வரும் பெயரிடப்படாதப் படத்தில் ஒரு பாடலுக்கு சூயாவுடன் ஆட சோனாக்ஷி சின்காவிடம் கேட்டிருக்கிறார்கள்.

சல்மான்கான் போன்ற திமிங்கலங்களுடன் நடித்து வருகிறவர் சோனாக்ஷி. அதற்கு கிடைக்கிற அதே தீனியை தந்தால் அவர் நடனமாட தயார். லிங்குசாமியும் அதனை உறுதி செய்திருக்கிறார்.

அதாவது ஒரு பாடலுக்கு ஆட சோனாக்ஷியிடம் கேட்டது உண்மை. அவரும் ஏறக்குறைய ஒத்துக் கொண்ட மாதிரிதான் என தெரிவித்துள்ளார்.