வில்லியாகவும் தயார்: த்ரிஷாவின் அதிரடி அறிவிப்பு!!

493

Trishaத்ரிஷா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் கடந்துள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தியிலும் நடித்துள்ளார். எல்லா படங்களிலும் அவருக்கு கதாநாயகனை காதலிக்கவும் டூயட் ஆடவுமான வேடங்களே அமைந்தன.

ஜோதிகா, மொழி, சந்திரமுகி படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். நயன்தாரா, ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்து பேசப்பட்டனர்.

அனுஷ்காவுக்கு அருந்ததி படம் திருப்புமுனையாக இருந்தது. தற்போது வரலாற்று படங்களில் நடிக்கிறார். இதுபோல் தனக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்று திரிஷா எதிர்பார்தார். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.

ஒரு படத்திலேனும் வித்தியாசமாக வந்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்த ஆர்வப்படுகிறார். எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாக நடித்து சலித்து விட்டது. வித்தியாசமான வேடம் ஏற்க ஆசைப்படுகிறேன். வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. விரைவில் அது மாதிரி கதாப்பாத்திரங்கள் அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.