வவுனியா வடக்குப் பிரதேசத்தில் மது மற்றும் புகைத்தலை இல்லாதொழிக்க பாடுபடுவோம் என்று அப்பிரதேச செயலக மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஊழியர்களும் மாணவர்களும் இன்று வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்தனர்.
மதுவை நிறுத்துவதன் ஊடாக பொருளாதாரத்தில் அபிவிருத்தி காணமுடியும் என்ற நோக்கில், வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கும் பின்னர் நெடுங்கேணி மகாவித்தியாலயம்வரை விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றன.
நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் முன்பாக உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. சுகாதாரத் திணைக்களத்தினுடைய சுகாதார கல்விப் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், உதவி பிரதேச செயலாளர் வி.ஆயகுலன், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுரேந்திரன், சுகாதார கல்விப் பிரிவு அதிகாரி கே.கேதீஸ் உட்பட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.