யாழ். மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

288

யாழ். மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை உள்ளடக்கிய யாழ். மாவட்ட இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ். மாவட்டத்தில் வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 312272 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

வெளியான முடிவுகளின்படி யாழ் தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 312272 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 23261 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1375 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 6845 வாக்குகளையும், எம்.எச்.எம்.ஹிஸ்புல்லா 973 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.