தோல்வியின் எதிரொலி : பதவி விலகவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு!!

287

தோல்வியின் எதிரொலி

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த அனைத்து பதவிகளிலிமிருந்து விலகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளியான தேர்தல் முடிவுகளின்படி கோட்டபாய ராஜபக்ஷ 10 லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன் தோல்வியின் எதிரொலியாக சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.