மலையகத்தில் கோட்டாபாய ராஜபக்சவின் வெற்றியை பட்டாசு கொளுத்தி ஆரவாரத்துடன் கொண்டாடும் ஆதரவாளர்கள்!!

459

மலையகத்தில்..

இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அதை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மலையகத்தில் தலவாக்கலை நகரிலும் பட்டாசு கொளுத்தி பெரும் ஆராவாரம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள். வழமைக்கு மாறாக தலவாக்கலையில் பா துகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர் உட்பட நகரவாசிகள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.