தயவுசெய்து எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் : ரஜினி -கமலுக்கு எஸ்.ஏ.சந்திர சேகர் வேண்டுகோள்!!

13


ரஜினி விரைவில், அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் நீதிமையத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு 65வது பிறந்தநாளையொட்டி பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று “உங்கள் நான்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பிரபு, வடிவேலு, விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ”எந்தத் தொழில் செய்பவர்களும் அரசியலுக்கு வரும்போது சினிமாத்துறையினர் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது? எனப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் இது தெரியவில்லை. கடந்த 50 வருடமாக சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான் ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது புதிதாக சினிமாவில் இருப்பவர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது.


ஒருகட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கினார்.

அரசியலில் இறங்குவது சாதாரண விஷயம் கிடையாது. நிச்சயமாக கமல் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார். கமலைப் போல் ரஜினியும் அரசியலுக்கு வர வேண்டும். தயவுசெய்து எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் ரஜினி.


அதேநேரம் நீங்கள் இருவரும் சேர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நல்லது. என் ஆசை மட்டுமே இது என்று பேசினார்.