முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ளுமா இந்திய அணி!!

465

Indiaஐ.சி.சி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முதல் இடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதில் 120 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் அவுஸ்திரேலியா (114), இங்கிலாந்து (111) அணிகள் உள்ளன.

இதனிடையே, நியூசிலாந்து செல்லும் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் 19ல் நேப்பியரில் ஆரம்பமாகின்றது. மறுபுறம், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், வரும் 19ம் திகதி ஆரம்பமாகிறது.

இதில் எட்டாவது இடத்திலுள்ள 86 புள்ளிகளுடன் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை, இந்தியா வெல்லும் பட்சத்தில் முதலிடத்தில் நீடிக்கலாம். மாறாக, நியூசிலாந்து வென்றால் இந்திய அணியின் முதலிடத்துக்கு ஆபத்து ஏற்படும். ஏனெனில், அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்ததை வீழ்த்தும் பட்சத்தில் தரவரிசையில் முன்னிலை பெறலாம்.