பந்துகளாக மாறிய ஏரி!!

634

Lake

வட அமெரிக்காவில் இருக்கும் மிச்சிகன் என்ற ஏரி முழுவதும் பனிபந்துகளால் சூழப்பட்ட கடல் போல் காட்சியளிக்கிறது.

வட அமெரிக்காவின் துருவ சூழலால் வெப்ப நிலை பூஜ்யத்திற்கு குறைந்துள்ளது. கூடைபந்துகளை போல் உருவத்திலிருக்கும் இந்த மிச்சிகன் ஏரியின் பனிப்பாறைகள் அப்பகுதியின் அருகில் இருக்கும் கிலேன் ஆர்பர் என்ற நகரம் வரை அலைகளாய் படர்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர் ஜோ சார்லிவேய்க்ஸ் கூறுகையில், மிச்சிகன் ஏரியிலிருக்கும் தண்ணீரின் வெப்ப நிலை உறையும் நிலைக்கு சற்று குறைவாகத்தான் உள்ளது.

எனினும் இதில் தோன்றும் சின்னஞ்சிறு பனிக்கட்டிகள் தண்ணீரில் கலந்து அலைகளோடு அலைகளாய் முன்னும் பின்னுமாய் வந்து தண்ணீரின் அளவை அதிகரிக்கின்றது என்றும் இதில் சில பனிக்கட்டிகள் பெரிய பனிக்கட்டிகளை போலவும் உருவெடுத்து, காற்றினால் கரையில் வீசப்பட்டு, அலைகளாய் மோதுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குளிர் காலத்தில் இது போன்ற பெரிய ஏரிகளில் தோன்றும் பனிக்கட்டிகளை பனிபாறைகள் அல்லது பனிபந்துகள் என அப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.