யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

7


விபத்தில்..


யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஊர்காவற்றுறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற முச்சக்கரவண்டியொன்றுடன் மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.