இலங்கையில் இணையம் மூலமாக நிதி மோ சடிகள் : அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

14


நிதி மோ சடிகள்


இலங்கையில் இணையம் மூலமாக நிதி மோ சடிகள் இடம்பெற சாத்தியம் இருப்பது குறித்து மத்திய வங்கி பொதுமக்களுக்கு எ ச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்பாக செயற்படவேண்டும் என்று மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.வங்கிகளில் கணக்குகளை வைத்திருப்போர் தமது கணக்கு இலக்கங்களை யாருடனும் பகிரவேண்டாம். அத்துடன் கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்கள் தொடர்பிலும் கவனமாக செயற்படுமாறு மத்திய வங்கி கோரியுள்ளது.


இலகுவழி கடன் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் சமூக வலைத்தளங்களின் ஊடாக பல்வேறு நிதி மோ சடிகள் இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.