என் காதலியை யாரும் பார்க்கக்கூடாது : காதலனின் அதிரடி குறும்பு!!

12


காதலனின் குறும்பு


நீச்சல் உடையை அதிகம் விரும்பும் தனது காதலியை யாரும் பார்க்கக்கூடாது என முடிவு செய்த ஒரு காதலன் வித்தியாசமான ஒரு முடிவு செய்தார். Pedro Cuccovillo Vitolaவின் காதலி Pattyக்கு நீசல் உடையும் ரொம்ப பிடிக்கும்,இன்ஸ்டாகிராமில் வகை வகையாக படங்களை பதிவேற்றுவதும் பிடிக்கும். ஆனால் தனது காதலியை மற்றவர்கள் பார்ப்பதோ, டேட்டிங் அழைப்பதோ Pedroவுக்கு பிடிக்கவில்லை. எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடிவு செய்தார் Pedro.


வெளியாகியுள்ள வீடியோவில், தனது காதலிக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறும் Pedro, அதை Patty தனது கண்களைக் கட்டிய வண்ணம் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். அதன்படி Patty அதை அணிந்துகொள்ள, கண்ணாடியைப் பார்த்தபடி, கண்ணில் கட்டியிருக்கும் கட்டை அவிழ்க்கச் சொல்கிறார் Pedro.


கட்டை அவிழ்த்து பார்க்கும் Patty ஒரே நேரத்தில் சந்தோஷத்திலும், வெட்கத்திலும் கத்துகிறார். காரணம் Pattyக்கு Pedro கொடுத்தது ஒரு நீச்சல் உடை. தனது முகத்தின் படத்தை அச்சிட்டு அந்த நீச்சல் உடையை வடிவமைத்திருந்தார் அவர்.

இனி என் காதலியை யாரும் பார்க்கவோ டேட்டிங்குக்கு அழைக்கவோ மாட்டார்கள் என்கிறார் Pedro குறும்பு கொப்புளிக்க.