வீரம் படத்துக்கு அஜித் வேடத்தில் வந்த ரசிகரால் பரபரப்பு!!

707

Ajithஅஜித்தின் வீரம் படம் தமிழகம் முழுவதும் நேற்று ரிலீசானது. வீரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் அஜித்தின் கட்அவுட்டுகள், கொடி தோரணம் அமைத்து இருந்தனர். பட்டாசும் கொளுத்தினார்கள்.

அசோக்நகரில் உள்ள உதயம் தியேட்டரில் ஜில்லா மற்றும் வீரம் படங்கள் திரையிடப்பட்டு உள்ளன. இதனால் இன்று காலை தியேட்டர் முன்னால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு நின்றனர். பாதுகாப்புக்கு ஏராளமான பொலிசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது ஒரு ரசிகர் வீரம் படத்தில் அஜித் வருவது போல் வெள்ளை வேட்டி சட்டையில் கண்ணாடி அணிந்து அஜித் போலவே காரில் வந்தார். அவரை பார்த்ததும் அஜித் என ரசிகர்கள் நம்பினார்கள். தல அஜித் வாழ்க என கோஷமிட்டபடி காரை மொய்த்தனர்.

கூட்டத்தினர் காரில் அஜித் இருக்கிறார் என நம்பி அவரை காண முண்டியடித்தார்கள். இதனால் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனால், அவர் பெயர் மனோகரன் என்பது தெரியவந்தது. இவர் சென்னை தனியார் கம்பெனியின் இயக்குனராக பணிபுரிகிறார்.

இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினார்கள். அதன்பிறகு காரில் இருந்து அந்த ரசிகர் இறங்கி கூட்டத்தினரை பார்த்து கையசைத்தார். அவருடன் ரசிகர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.