ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் : அமைச்சரவை இன்று நியமனம்!!

36


இடைக்கால அரசாங்கம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான உறுப்பினர்கள் 15 பேர் இன்று தமக்கான அமைச்சரவை நியமனங்களை பெற்றுக்கொண்டு கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.இதன்படி இன்று காலை 8 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சு நியமன நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இன்றைய தினம் 15 உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர். அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு புதிய ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டமும் ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளது.


ஜனாதிபதி தேர்தல் முடிவில் நடப்பு அரச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து அந்த அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.