உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெண்ணுக்கு இது மறுபிறவியா? சிலிர்க்க வைக்கும் ஆதாரம்!!

9


கிரெட்டா துன்பெர்க்


120 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பழமையான புகைப்படத்தில் கிரெட்டா துன்பெர்க் தோற்றம் இடம்பெற்றிருப்பதால் அவருக்கு இது மறுபிறவியாக இருக்கலாம் என இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் சுவீடனை சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்கிற 16 வயது சிறுமி உலக அளவில் பிரபலமடைந்துவிட்டார். அவருக்கு ஆதரவாக பல நாடுகளிலும் மக்கள் காலநிலை மாறுதலுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் எழுத்தாளர் ஜாக் ஸ்ட்ரேஞ்ச் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 1898ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


டொமினியன் க்ரீக், யூகோன் பிரதேசத்தில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் மூன்று சிறுமிகள் வேலை செய்வதை அந்த புகைப்படம் காட்டுகிறது. அதில் ஒரு சிறுமி மட்டும் கிரெட்டா துன்பெர்க் போன்ற தோற்றத்துடன் இருப்பதால், அவர் அ ழியாதவர் அல்லது மறுபிறவி எடுத்தவர் என்று இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்காலத்தை காப்பாற்ற கடந்த காலத்திலிருந்து திரும்பி வந்த ஒரு நேர பயணியாக கூட இருக்கலாம் என்றும் இணையதளவாசிகள் கூறி வருகின்றனர்.