காதலரை மணக்கிறார் பிபாஷா பாசு!!

498

Bipasha

இந்தி நடிகர் ஜோன் ஆப்ரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் பிரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து பிபாஷா பாசு இந்தி நடிகர் ஹர்மன் பவேஜாவை காதலிக்க துவங்கினார். இந்நிலையில் பிபாஷா பாசுவும் தனது காதலர் ஹர்மன் பவேஜாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடனும் நடக்க இருக்கிறது.

இப்போது ஷில்பா ஷெட்டி தயாரிக்கும் திஷ்கியான் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் ஹர்மன்.
இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருக்கிறது. இந்த படம் வெளியானதும் இருவரும் சேர்ந்து தங்களது திருமண திகதியை முடிவு செய்து அறிவிக்க உள்ளனர்.