மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் : கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு!!

16


மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்


எதிர்வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்தலை நடத்தப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்கீழ் விரைவில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தாம் கலந்தாலோசித்து வருவதாக அவர் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சத்திய பிரமாணத்தின்போது குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இன்று இடம்பெற்ற அமைச்சரவை பதவிபிரமாணத்தின்போது பா துகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குத்துறைக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இதற்கிடையில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தா க்குதலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் தற்போது சீரடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அண்மையில் தெரிவித்திருந்தது.


எனினும் புதிய ஜனாதிபதியின் சமூக செலவீனங்கள் மற்றும் அரச பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமானால் அது இலங்கையின் பொது நிதியை பாதிக்கும் என்று பிட்ச் ரேட்டிங் நேற்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-