வவுனியாவில் விபுலம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்!!

23


விபுலம் சஞ்சிகை வெளியீடு


வவுனியா, விபுலானந்தா கல்லூரியின் விபுலம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் பொன்.சிவநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக இன்று (22.11.2019) இடம்பெற்றது.விபுலானந்தா கல்லூரியின் சாதனைகளை தாங்கியவாறு 7 ஆவது விபுலம் இதழ் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை பாடசாலை அதிபரிடம் இருந்து உதவி மாவட்ட செயலாளர் நா.கமலதாசன் பெற்று வெளியிட்டு வைத்தார்.


அத்துடன் இவ்வாண்டு கோட்ட, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் சாதனைகளைப் படைத்த மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி சகாஜராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் சு.தர்மலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர் சுமந்திரன், கோட்ட கல்விப் பணிப்பாளர் மரியநாயகம், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை பழைய மாணவர்கள்ட, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.