விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி!!

16


விபத்தில்..


கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தினூடகச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, வீதியை விட்டு விலகிச் சென்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில், பாலத்தினூடாக அமைக்கப்பட்டிருந்த நீர்க்குழாய்க்கும் பாலத்துக்கும் இடையில் குறித்த வண்டி சிக்குண்டு இருந்ததால் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


காக்காமுனையிலிருந்து இன்று கிண்ணியாவுக்குச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.