வவுனியாவைச் சேர்ந்த வைத்தியர் அரவிந்தனை வட மாகாண ஆளுநராக நியமிக்க பரிந்துரை!!

506

தே.அரவிந்தன்

வடமாகாண ஆளுநர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுநராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் வவுனியாவைச் சேர்ந்த விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்திய கலாநிதி தே.அரவிந்தன் யாழ்ப்பாணம் , வவுனியா, அனுராதபுரம் மாவட்டங்களில் விசேட சத்திர சிகிச்சை வைத்தியராக பணியாற்றிய நிலையில் தற்போது கொழும்பில் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-