யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் ப லி!!

568

யாழில்..

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு நேர தபால் புகையிரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உ யிரிழந்தவரின் ச டலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.