வவுனியாவில் பிரான்ஸ் வைத்திய குழுவின் இலவச மருத்துவ முகாம்!!

568

இலவச மருத்துவ முகாம்

வவுனியா – வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இன்று (24.11.2019) காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இலவச மருத்துவ முகாம் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா தமிழ் விருட்சம் மற்றும் விண்மீன்கள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இம்மருத்துவ முகாமில் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 3 வைத்தியர் குழாம் நரம்பு, எலும்பு, தசைக்கான மசாஜ் வைத்தியத்தினை நோயாளர்களுக்கு மேற்கொண்டு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான வைத்திய சிகிச்சை நிலையங்கள் கணிசமானளவு காணப்படவில்லை எனினும் இன்றைய இலவச மருத்துவ முகாமில் வயது வேறுபாடு இன்றி பெருமளவனோர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சிறிசபாரத்தினம் அறக்கட்டளையின் ஆலோசகர் சபாநாதன், விண்மீன் அமைப்பின் தலைவர் புவிகரன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.