வவுனியாவில் அமைதிக் கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

494

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் அமைதிக் கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் மண்டபத்தில் இன்று (24.11.2019) இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கீத்தா கரந்தவல தலைமையில் நடைபெற்றது.

தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு அமைதி கல்வித்திட்டம் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. அக்கல்வித்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்ட்டது.

அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை மற்றும் திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கல்வியல் கல்லூரி மாணவர்களால் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான நாடகம் ஒன்றும் அரகேற்றப்பட்டிருந்தது. நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் அதிதிகளுக்கு நினைவுப்பரிசில்கள் வழங்கி வைக்கப்படடது.

நிகழ்வில் உப பீடாதிபதிகளான திருநானந்தம் ஜெயகாண்டீபன், பொ.சத்தியநாதன், விரிவுரையாளர்களான செ.இந்திராதேவி, க.சிவகுமார், சிரேஸ்ட பொறியாளர் சோபா தயாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.