வவுனியாவில் மின்கம்பத்தில் பழுதுபார்த்துக்கொண்டிருந்த மின்சாரசபை ஊழியர்கள் இருவர் மின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.
இதன்போது காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய பிரதான மின்பொறியியலாளர் சி. பிரபாகரன் தெரிவித்தார்.
குறித்த ஊழியர்கள் இருவரும் மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாரை திருத்தம் செய்யும் முகமாக வவுனியா நகரசபைக்கு முன்பாக இருந்த மின் கம்பத்தில் பழுது பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.
எஸ். சந்திரசூரி (43) மற்றும் கெ. தவரோகன் (35) ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.