வவுனியா மாவட்டத்திலுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்று 13 ஆம் திகதி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் பணிப்புரைக்கு அமைய இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.