பூமியின் கீழ் புதைந்த கிராமங்கள் : ப லி எண்ணிக்கை 36 ஆக உயர்வு!!

325

புதைந்த கிராமங்கள்

கிழக்கு ஆபிரிக்கா நாடான கென்யாவில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

கென்யாவின் மேற்கு போகோட் மாகாணத்தில் பொழிந்து இடைவிடாத கடும் மழை மற்றும் வெள்ளதால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல கிராமங்கள் பூமியின் கீழ் பு தைந்துள்ளது. இதனால், பெருமளவிலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

கா ணாமல் போனதாக நினைத்த பலர் இ றந்ததால் ப லி எண்ணிக்கை 36-ஐ எட்டியுள்ளது என மாகாணத்தைச் சேர்ந்த செனட்டரான சாமுவேல் போகிசியோ தெரிவித்துள்ளார்.

மேற்கு போகோட் மாவட்ட ஆளுநர் ஜான் லோனியாங்காபுவோ கூறுகையில், இறந்தவர்களில் 11 பேர் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள். அதிகமான மக்கள் தப்ப முடியாத இடத்தில் சிக்சி தவித்து வருகின்றனர். முழு கிராமமும் வெள்ளத்தால் அழியும் அபாயத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

தக்மால் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி 17 பேரும், பருவா மற்றும் தபாச் கிராமங்களில் நிலச்சரிவில் சிக்கி 12 பேரும் உ யிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பா திக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் ராணுவ மற்றும் பொலிஸ் ஹெலிகாப்டர்களை அனுப்பியது, ஆனால் பே ரழிவின் தா க்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என உள்துறை அமைச்சரவை செயலாளர் பிரெட் மத்தியாங்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பா திக்கப்பட்ட குடும்பங்களுக்கு கென்யாவின் ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.